Satura rādītājs:
- இரைப்பை அழற்சி (வாயுத்தொல்லை) என்றால் என்ன?
- இரைப்பை அழற்சியின் வகைகள் (Kuņģa problēmu veidi)
- வாயுக்கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள் - Kuņģa problēmas cēloņi tamilu valodā
- வாயுத் தொல்லையை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியங்கள்
- வாயு தொல்லைக்கு பேக்கிங் சோடா வைத்தியம்
- வாயு கோளாறை நீக்கும் கற்றாழை ஜெல்
- வாயுவை சரி செய்யும் மாய நீர் இளநீர்
- வாயுத்தொல்லையை நீக்கும் க்ரீன் டீ
- வாயுவை சரி செய்யும் ஆப்பிள் சீடர் வினிகர்
- வாயு தொல்லைக்கு அருமருந்து இஞ்சி
- வாயுவை குணமாக்கும் ஓட்ஸ்
- வாயு தொல்லைக்கு தேங்காய் எண்ணெய் வைத்தியம்
- வாயு கோளாறை சரி செய்யும் தயிர்
- தேவை இல்லாத வாயுவை விரட்டியடிக்கும் தேன்
- வாயு கோளாறை நீக்கும் வெல்லம்
- வாயு தொல்லைக்கு சீரக தண்ணீர்
- வாயுவை போக்கும் மஞ்சள்
- வாயுவுக்கு பாதாம் பால்
- வாயு தொல்லைக்கு உருளைக்கிழங்கு ஜூஸ்
- வாயுவை நீக்கும் அதிமதுரம்
- வாயுவை தீர்க்கும் மிளகு
- வாயு தொல்லைக்கு வைத்தியம் பெருங்காயம்
- வாயு தொல்லைக்கு மருந்தாகும் ரோஸ்மேரி
- வாயு கோளாறு வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்
- இறுதியாக
வாயு பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்களா.. கவலை வேண்டாம், இது ஒரு சாதாரண விஷயம்தான். பொதுவாகவே பெரும்பான்மை மனிதர்களுக்கு இந்த சிக்கல் இருக்கிறது.பகலோ இரவோ எல்லா நேரங்களிலும் வந்து தாக்க கூடியது இந்த வாயு பிரச்னை.
வாந்தி, அடிவயிற்று வலி, நெஞ்செரிச்சல், தொண்டையில் அமிலம் சேர்ந்த தன்மை போன்றவை எல்லோராலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த துன்பங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டி வராமல் இருக்க நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்.
வாயு சிக்கல்கள் ஏற்படுவதற்கான இன்றியமையாத காரணங்கள் மற்றும் அது ஏற்படாமல் தடுப்பதற்கான வீட்டுமுறை வைத்தியங்கள் குறித்து பார்க்கலாம்.
இரைப்பை அழற்சி (வாயுத்தொல்லை) என்றால் என்ன?
இரைப்பை அழற்சி எனப்படும் வாயுக்கோளாறு என்பது வயிற்றில் உள்ளிருக்கும் பகுதியில் வீக்கங்கள் மற்றும் அமிலங்களால் அரிப்பு புண் ஏற்படுவதை குறிக் வயிற்றின் உட்புறம் உள்ள இந்த இடம்தான் செரிமானத்துக்கு தேவையான நொதிகளை உற்பத்தி செய்கிறது. வீக்கம் அடைகின்ற போது இது இதன் உற்பத்தியை குறைத்து விடுகிறது. அதனால்தான் வாயுக்கோளாறு ஏற்படுகிறது. (1,2)
இரைப்பை அழற்சியின் வகைகள் (Kuņģa problēmu veidi)
கடுமையான வாயுக்கோளாறு - இது திடீரென ஆரம்பித்து விரைவில் முடிந்து விடும் தன்மை கொண்டது.
நீண்டகால வாயுக்கோளாறு - ஆரம்பத்தில் கவனிக்கப்படாத வாயு சிக்கல்கள் நீண்ட கால நோய்க்கு வழிவகுக்கிறது
ஜீரண மண்டலத்தில் ஏற்படும் இந்த நோய்க்கான காரணங்கள் பற்றி பார்க்கலாம். (1,2)
வாயுக்கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள் - Kuņģa problēmas cēloņi tamilu valodā
பெரும்பாலும் வயிற்றின் ஜீரண செயல்பாடுகள் நடக்கும் இடத்தில் ஏற்படும் உண்டாகும் அழற்சி மற்றும் புண் வாயுக்கோளாறுக்கு வழி செய்கிறது. சிறுகுடலால் செரிக்கமுடியாத கார்போஹைட்ரட்களை பெருங்குடல் பேக்டீரியாக்கள் வாயுவாக மாற்றுகின்றன.
பல்வேறு காரணங்களால் வாயுக் கோளாறு ஏற்படலாம். அவையாவன
- ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம்
- அதிக அளவு மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கங்கள்
- மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடும் வலிநிவாரணி மாத்திரைகள்
- பேக்டீரியா தொற்று மூலமாக வாயுத் தொல்லை வரலாம்.
- ஆட்டோ இம்மியூன் நோய் (எதிர்ப்பு சக்தி குறைபாடு) உள்ளவர்களுக்கு வாயு கோளாறு வரும்
- அளவுக்கதிகமான மன அழுத்தம் காரணமாக வாயு சிக்கல்கள் வரலாம்.
- எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் கிருமி நோய்தொற்றி போன்ற வைரல் தொற்று ஏற்பட்டால் வாயு கோளாறு உண்டாகும்.
- உடலில் வாயு கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள்
வயிற்றில் ஏற்படும் சாதாரண எரிச்சல் கூட நாம் கவனிக்காமல் விட்டால் பின்னாளில் வாயு கோளாறில் கொண்டு போய் விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள் (1,2). இது தவிர வாயு தொல்லை ஏற்படுவதற்கான சில காரணங்கள்.
- குமட்டல்
- வாந்தி
- பசியின்மை
- வயிற்று வலி மற்றும் பொருமல்
- இடைவிடாத விக்கல்
- நீண்ட காலத்திற்கு பின் வெளியாகும் மலம்
- ரத்த வாந்தி
இந்தப் பட்டியலில் கடைசியாக கூறப்பட்ட இரண்டு அறிகுறிகள் மிக தீவிரமான வாயு கோளாறை குறிக்கும். உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். வெறும் வாயு தானே என்று நீங்கள் அலட்சியமாக இருந்து விட்டால் உங்கள் குடல் சுற்று சுவர் மெல்ல அரிக்கப்பட்டு தீவிர நிலைக்கு செல்லும் வாய்ப்பு உண்டு.
(1,2)
Shutterstock
வாயுத் தொல்லையை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியங்கள்
வாயு தொல்லைக்கு பேக்கிங் சோடா வைத்தியம்
தேவைப்படும் பொருள்கள்
பேக்கிங் சோடா - ஸ்பூன்
தண்ணீர் - 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
வீட்டில் உள்ள பேக்கிங் சோடாவை வைத்தே நீங்கள் உங்கள் வாயு கோளாறுக்கு குட் பை சொல்லலாம்.
இதற்கு தேவையானவை ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவும் ஒரு டம்ளர் நீரும்தான். ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து குடிக்கவும்.
எப்படி இது வேலை செய்கிறது
வயிற்றில் இருக்கும் எரிச்சல் உணர்வே வாயுக்கோளாறுக்கு வழி வகுக்கிறது. பேக்கிங் சோடாவில் உள்ள அண்டாசிட் இந்த எரிச்சல் உணர்வை குறைக்கிறது. வயிற்றில் சுரக்கும் காரமான அமிலங்களின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது (3).
வாயு கோளாறை நீக்கும் கற்றாழை ஜெல்
தேவைப்படும் பொருள்கள்
கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
கற்றாழை ஜெல்லை தண்ணீரில் நன்கு கரைத்து குடிக்க வேண்டும்
எவ்வளவு முறை இப்படி செய்யலாம்
ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்து கொள்ளலாம்
எப்படி இது வேலை செய்கிறது
கற்றாழை ஜெல் காயம்பட்ட குடல்பகுதியை இதம் செய்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் கொண்டுள்ள குடல் சுவர்களை குணப்படுத்துகிறது. கற்றாழை ஜெல் ஒரு ஆன்டிசெப்டிக் ஏஜெண்டாகவும் இருப்பதால் வயிற்றில் தீமை விளைவிக்கும் பேக்டீரியாக்களை அழிக்கிறது (4).
வாயுவை சரி செய்யும் மாய நீர் இளநீர்
தேவைப்படும் பொருள்கள்
இளநீர்
என்ன செய்ய வேண்டும்
உணவு உண்பதற்கு மத்தியிலான நேரங்களில் ஒரு டம்ளர் இளநீர் பருகுங்கள்
எவ்வளவு முறை சாப்பிடலாம்
ஒரு நாளைக்கு 3 அல்லது நான்கு முறை இப்படி செய்யலாம்.
எப்படி இது வேலை செய்கிறது
இளநீரை உங்கள் வயிற்று புண்களை ஆற்றுப்படுத்துவதில் வல்லமை வாய்ந்தது. இளநீரில் உள்ள அழற்சி வீக்க பண்புகள் உங்கள் குடல் சுவரில் ஏற்பட்டுள்ள வீக்கம் எரிச்சல் அரிப்பு போன்றவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது (5).
வாயுத்தொல்லையை நீக்கும் க்ரீன் டீ
தேவைப்படும் பொருள்கள்
க்ரீன் டீ - 1 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
வெந்நீர் - 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
நல்ல சூடான வெந்நீரில் ஒரு ஸ்பூன் க்ரீன் டீயை போட்டு மூடவும். இரண்டு நிமிடம் கழித்து நீரை வடிகட்டவும். அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து பருகவும்.
எவ்வளவு முறை எடுத்துக் கொள்ளலாம்
நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை
எப்படி இது வேலை செய்கிறது
வயிற்றின் குடல் பகுதியில் ஏற்படும் நாள்பட்ட அழற்சிதான் வாயு கோளாறுக்கு வழிவகுக்கிறது என்பதை ஏற்கனவே கூறியிருந்தோம். க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் குடல் சுவரை பாதிக்கும் வீக்கங்கள் மற்றும் அரிப்புக்களை க்ரீன் டீ தொடர்ந்து குடிப்பவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பெரும்பான்மை சிக்கல்கள்சரியாகி விடுவதாக கூறப்படுகிறது (6).
வாயுவை சரி செய்யும் ஆப்பிள் சீடர் வினிகர்
தேவைப்படும் பொருள்கள்
ஆப்பிள் சீடர் வினிகர் - 1 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
தண்ணீர் - 1 ஸ்பூன்
என்ன செய்ய வேண்டும்
தண்ணீரில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேனை கலந்து பருகவும்.
எவ்வளவு முறை எடுத்துக் கொள்ளலாம்
நாளொன்றுக்கு இரண்டு முறை
எப்படி வேலை செய்கிறது
ஆப்பிள் சீடர் வினிகர் வயிற்றில் அளவுக்கதிகமாக சுரக்கும் அமிலங்களை சமன் செய்கிறது. குடலை பாதிக்கும் எண்ணற்ற நுண்ணுயிர்களை அழிக்கிறது. தேன் பாதிக்கப்பட்ட குடலை இதம் தந்து பாதுகாக்கிறது (7).
வாயு தொல்லைக்கு அருமருந்து இஞ்சி
தேவைப்படும் பொருள்கள்
இஞ்சி - 1 துண்டு
தண்ணீர் - 1 கப்
என்ன செய்ய வேண்டும்
இஞ்சி துண்டை வாயில் போட்டு மெல்ல வேண்டும். விழுங்கிய உடன் தண்ணீரை குடித்து விடவும்.
இன்னொரு முறை என்ன வென்றால் இஞ்சி தூள், இந்துப்பு மற்றும் பெருங்காயம் மூன்றையும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்கவும். குடித்த உடனே வாயு தொல்லை சரியாகி விடும்.
எவ்வளவு முறை
தினமும் காலையில் 1 முறை செய்ய வேண்டும்
எப்படி வேலை செய்கிறது
இஞ்சி எனும் அற்புதமான மூலிகை வயிற்றில் ஏற்படும் கிருமிகளை நீக்கி வயிற்றுக்கு பெரும் உதவி செய்கிறது (8). Helicobacter pylori எனப்படும் நாள்பட்ட வயிற்று கோளாறினை அதிகரிக்காமல் குறைத்து விடுவதில் இஞ்சி உதவி செய்கிறது (9). இதற்கு இதில் உள்ள ஆன்டிபேக்டீரியால் அழற்சி எதிர்ப்பு பண்புகளே ஆகும்.
வாயுவை குணமாக்கும் ஓட்ஸ்
தேவைப்படும் பொருள்கள்
ஓட்ஸ் - 1 கப்
பால் அல்லது நீர் - 1 கப்
என்ன செய்ய வேண்டும்
ஓட்ஸை பாலிலோ நீரிலோ வேகவைத்து உண்ணவும். தேவையெனில் அமிலத்தன்மை இல்லாத பழவகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
எவ்வளவு முறை செய்ய வேண்டும்
தினமும் ஒருமுறை ஓட்ஸை உணவில் சேர்த்திக் கொள்ளுங்கள்
எப்படி வேலை செய்கிறது
ஓட்ஸில் நார்ச்சத்து மற்றும் கனிமச்சத்து அதிகமாக காணப்படுகிறது. இது ஜீரண மண்டலத்தின் செரிமான வேலைகளை சுலபம் ஆக்குகிறது. கூடவே வயிற்றில் ஏற்பட்டுள்ள குடல் சுவர் புண்களை இதமாக்குகிறது. (10)
வாயு தொல்லைக்கு தேங்காய் எண்ணெய் வைத்தியம்
தேவைப்படும் பொருள்கள்
விர்ஜின் தேங்காய் எண்ணெய்
என்ன செய்ய வேண்டும்
உங்கள் உணவில் தேங்காய் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எவ்வளவு முறை செய்ய வேண்டும்
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் எண்ணெய் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
எப்படி வேலை செய்கிறது
தேங்காய் எண்ணெயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் வாயு கோளாறால் ஏற்படும் ஆக்சிடேடிவ் அழுத்தங்களை குறைக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உங்கள் வயிற்றில் குடல் சுவரில் உள்ள வீக்கங்களை சரி செய்வதில் உதவுகிறது. இதனால் வாயு கோளாறு அறிகுறிகள் நீங்குகின்றன (11).
வாயு கோளாறை சரி செய்யும் தயிர்
Shutterstock
தேவைப்படும் பொருள்கள்
தயிர்
என்ன செய்ய வேண்டும்
தயிரை உங்கள் உணவிலோ நொறுக்கு தீனியிலோ சேர்த்து கொள்ளுங்கள்
எவ்வளவு முறை செய்யலாம்
வாயு கோளாறு இருப்பவர்கள் தினமும் இரண்டு முறை தயிரை தங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்
எப்படி இது வேலை செய்கிறது
தயிர் ப்ரோபயாடிக் உணவுகளில் ஒன்று. வயிற்றில் உள்ள அழற்சி நோய் மற்றும் அல்சர் போன்றவற்றை சரி செய்வதில் ப்ரோபயாடிக் உதவி புரிகிறது. H.pylori கிருமியை ஒழிப்பதில் முக்கியமாக வேலை செய்கிறது. இந்த கிருமி தான் வாயு கோளாறு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது (12).
தேவை இல்லாத வாயுவை விரட்டியடிக்கும் தேன்
தேவைப்படும் பொருள்கள்
தேன் - 2 ஸ்பூன்
வெந்நீர் - 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
வெதுவெதுப்பான நீரில் தேனைக் கலந்து பருகவும்
எவ்வளவு முறை செய்யலாம்
தினமும் காலையில் இதனை முயற்சிக்கவும்
எப்படி இது வேலை செய்கிறது
தேன் வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. ஏனெனில் தேன் ஒரு இயற்கையான கிருமி நாசினி. மேலும் தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் அடி ஆக்சிடென்ட் பண்புகள் வயிற்று சுவரில் உண்டாகி இருக்கும் காயங்களை ஆற்றுப்படுத்ோளாறு்
வாயு கோளாறை நீக்கும் வெல்லம்
தேவைப்படும் பொருள்கள்
வெல்லம் - சிறிதளவு
ஓமம் - சிறிதளவு
மிளகு - சிறிதளவு
என்ன செய்ய வேண்டும்
மூன்றையும் சம அளவில் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி சாப்பிட வேண்டும்
எவ்வளவு முறை சாப்பிடலாம்
காலை மாலை என இரு வேலைகள் தினமும் 5 கிராம் வீதம் சாப்பிடலாம்.
எப்படி வேலை செய்கிறது
வெல்லத்தில் உள்ள சிறப்பு தாது பொருள்கள் வயிற்றில் வாயு சேர விடாமல் காக்கிறது. அதனுடன் ஓமம் மற்றும் மிளகு சேர்ப்பதால் இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாயுவை உண்டாக்கும் கிருமிகளை போக்கி காயங்களை சரி செய்கிறது.
வாயு தொல்லைக்கு சீரக தண்ணீர்
தேவைப்படும் பொருள்கள்
சீரகம் - 1 ஸ்பூன்
வெந்நீர் - 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
சீரகத்தை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியை நீருடன் சேர்த்து அருந்தவும்.
எவ்வளவு முறை செய்யலாம்
உணவருந்தும் போது நீருக்கு பதில் இதனை குடிக்கலாம். நாளொன்றுக்கு 3 முறை சாப்பிடலாம்
எப்படி வேலை செய்கிறது
சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாயு கோளாறு ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து புண்களை ஆற்றுகிறது. அதனால் வாயு கோளாறு ஏற்படும் வாய்ப்புகள் இல்லாமல் போகின்றன.
வாயுவை போக்கும் மஞ்சள்
தேவைப்படும் பொருள்கள்
மஞ்சள் - 1 ஸ்பூன்
நீர் - கொஞ்சம்
வாழைப்பழம் அல்லது தயிர் - 1 கப்
என்ன செய்ய வேண்டும்
இவை அத்தனையையும் ஒன்றாக ஒரு பேஸ்ட் போல ஆக்கி உண்ணவும்
எவ்வளவு முறை செய்யலாம்
தினமும் 1 முறை
எப்படி வேலை செய்கிறது
மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் பொருள் பல்வேறு மாயங்களை உடல்நலத்தில் கொண்டு வர வல்லது. இதில் இருக்கும் கிருமி நாசினி மூலப்பொருள்கள் வாயுவை ஏற்படுத்தும் திசுக்களை குணப்படுத்தி ஜீரண மண்டலத்தில் ஏற்பட்டுள்ள எரிச்சல்களை போக்குகிறது (14).
வாயுவுக்கு பாதாம் பால்
தேவைப்படும் பொருள்கள்
பாதாம் - 1 கைப்பிடி
நெய் - 1 டீ ஸ்பூன்
பால் - 1 கப்
சர்க்கரை - சிறிதளவு
என்ன செய்ய வேண்டும்
பாதாமை லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு உருகியதும் பாதாம் பொடி நெய் மற்றும் பாலை சேர்க்க வேண்டும்.இதனுடன் ஊற வைத்த பாதாம் பிசினை சேர்த்தால் இன்னும் நல்ல பலனை தரும்.
எவ்வளவு முறை சாப்பிடலாம்
நாளொன்றுக்கு இரண்டு முறை இந்தப் பாலை பருகி வரலாம்
எப்படி பலன் தருகிறது
அல்சரை குணப்படுத்தும் சக்தி பாதாமிற்கு உள்ளது. குடல் புண்களை ஆற்றுப்படுத்தும் தன்மை பாதாம் பிசினுக்கு உள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகளும் ஆன்டி ஆக்சிடென்ட்களும் மேலும் தாது பொருள்களும் வயிற்றில் வாயு கோளாறை ஏற்படுத்தும் கிருமிகளை நீக்கி புண்களை சரி செய்க
வாயு தொல்லைக்கு உருளைக்கிழங்கு ஜூஸ்
தேவைப்படும் பொருள்கள்
உருளைக்கிழங்கு - 2
வெந்நீர் - 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
உருளைக்கிழங்கினை தோல் உரித்து துருவி ஜூஸ் எடுக்கவும். அதனை வெந்நீரில் கலந்து பருகவும்.
எவ்வளவு முறை செய்யலாம்
ஒரு நாளைக்கு இருமுறை செய்யலாம். சாப்பிடுவதற்கு அரைமணி முன்பு இதனைப் பருக வேண்டும்.
எப்படி வேலை செய்கிறது
உருளைக்கிழங்கில் காணப்படும் அதிக அளவிலான கார அமிலங்கள் வயிற்றில் அளவுக்கதிகமாக சுரக்கும் அமிலங்களுடன் எதிர்வினை புரிகின்றன (15). கூடவே வயிற்று புண்களையும் ஆற்றுகின்றன (16).
வாயுவை நீக்கும் அதிமதுரம்
தேவைப்படும் பொருள்கள்
அதிமதுர பொடி - 1 ஸ்பூன்
வெந்நீர் - 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
அதிமதுர பொடியை வெந்நீரில் கலந்து 10 நிமிடம் ஊற விடவும்.பின்னர் அருந்தவும்.
எவ்வளவு முறை அருந்தலாம்
தினமும் 1 முறை போதுமானது
எப்படி வேலை செய்கிறது
அதிமதுரத்தின் வேர்கள் வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காப்பாற்றும் தன்மை வாய்ந்தது. ஆகவே வயிற்றில் சுரக்கும் அமில அளவை சரி செய்து அல்சர் மற்றும் வாயு கோளாறுகளை வராமல் தடுக்கிறது (17).
வாயுவை தீர்க்கும் மிளகு
தேவைப்படும் பொருள்கள்
மிளகு - 1 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
என்ன செய்ய வேண்டும்
தேனில் மிளகை குழைத்து சாப்பிடவும்
எவ்வளவு முறை சாப்பிடலாம்
1 நாளைக்கு 2 முறை சாப்பிடலாம்
எப்படி வேலை செய்கிறது
மிளகில் உள்ள சிறப்பான மருத்துவ குணங்கள் வயிற்றில் ஏற்படும் பல்வேறு ஜீரண கோளாறுகளை சரி செய்கிறது. பொதுவாக சமையலில் பச்சை மிளகாயை தவிர்த்து மிளகை சேர்ப்பது நலம் தரும்.. மிளகும் தேனும் இந்தக் காயங்களை சரி செய்கிறது.
வாயு தொல்லைக்கு வைத்தியம் பெருங்காயம்
தேவைப்படும் பொருள்கள்
பெருங்காயம்
வெந்நீர்
என்ன செய்ய வேண்டும்
1 டம்ளர் நீரில் ஒரு சிட்டிகை அல்லது இரண்டு சிட்டிகை அளவு பெருங்காயத்தை கலந்து குடிக்கவும்.
எவ்வளவு முறை செய்யலாம்
நாளொன்றுக்கு 2 முறை செய்யலாம்
எப்படி வேலை செய்கிறது
இதை உணவில் சிறிது சேர்க்கும்போது, வயிற்றில் உண்டாகும் வாயுவை வெளியேற்றும். வீக்கத்தை கரைத்து வலியை நீக்க கூடியதாக விளங்குகிறது.மேலும் வாயுவை ஏற்படுத்தும் நுண்கிருமிகளை போக்கும் தன்மை உடையது.
வாயு தொல்லைக்கு மருந்தாகும் ரோஸ்மேரி
தேவைப்படும் பொருள்கள்
ரோஸ்மேரி இலைகள் - சிறிதளவு
வெந்நீர் - 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
கொதிக்க வைத்த நீரில் ரோஸ்மேரி இலைகளை போட்டு மூடி விடவும். சிறிது நேரம் கழித்து நீரை வடிகட்டி குடிக்கவும்.
எவ்வளவு முறை செய்யலாம்
தினமும் 2 முறை இந்த டீயை பருகலாம்
எப்படி வேலை செய்கிறது
ரோஸ்மேரியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருக்கின்றன. கூடவே ஆன்டி ஆக்சிடென்ட்களும் நிறைய காணப்படுகின்றன. இந்த தேயிலையை தினமும் அருந்துவதால் வயிற்றில் ஏற்படும் புண்கள் குணமாவதோடு அதன் தொடர்ச்சியான வாயு கோளாறும் வராமல் தடுக்கப்படுகிறது (18).
வாயுத் தொல்லையை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியங்கள்
வைட்டமின் சி மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. வாயு தொல்லையால் அவதிப்படுவபர்களுக்கு அதனாலேயே வைட்டமின் சி பரிந்துரை செய்யப்படுகிறது. வயிற்றினுள் ஏற்பட்டிருக்கும் நோய் தொற்றை சீக்கிரம் குணமாக்கும் தன்மை கொண்டது வைட்டமின் சி. ஆனாலும் மருத்துவரின் ஆலோசனையுடன் அவர் கூறும் அளவுமுறைகளில் வைட்டமின் சி மருந்து எடுத்து கொள்வது நன்மை தரும் (19).
வாயு கோளாறு வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்
Shutterstock
- தினமும் 7 முதல் 8 டம்ளர் நீர் அருந்தி வருவதை முறைமையாக்க வேண்டும்
- வாயு கோளாறு மற்றும் வயிற்று உபாதைகளுக்கான யோக பயிற்சிகளை அறிந்து கொண்டு அதனை செய்து வரலாம். பாவனமுக்தாசனா உங்கள் வயிற்றில் உள்ள தேவையற்ற வாயுவை நீக்க உதவி செய்கிறது. விபரீத கர்ண யோக முறை உங்கள் முதுகையும் வயிறையும் பலப்படுத்துகிறது.
- வாயு கோளாறை சரி செய்யும் உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் வாயு கோளாறே வராமல் தடுக்கலாம். ஆப்பிள், வாழைப்பழம் பைனாப்பிள் போன்ற பழ வகைகள் கீரை வகைகள் வெங்காயம் பீன்ஸ் போன்றவைகளை பயன்படுத்துங்கள்.
- எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்த்து ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளலாம்.
- கரியமில வாயு இருக்கும் குளிர்பானங்களை அருந்துவதை குறைத்து கொள்வது பல நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.
- மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கங்களை விட்டொழித்தால் உங்களை வாயுக்கோளாறு நெருங்காது
- தினமும் 30 நிமிட உடற்பயிற்சி உங்களை பல்வேறு வயிற்று உபாதைகளில் இருந்து காப்பாற்றும்
- உங்கள் உடலுக்கு ஒவ்வாத உணவு என்பதை நீங்களே கண்டுபிடிப்பது சுவாரஸ்யமான சவால் தான். இந்த சவாலை ஏற்று கொண்டு உணவு பழக்கத்தை விழிப்புணர்வோடு கவனிப்பவர்களுக்கு வாயு தொந்தரவு மட்டுமல்ல வேறு எந்த தொந்தரவும் வராது.
இறுதியாக
வாயு கோளாறு என்பது நம்மை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் கஷ்டப்படுத்தும் ஒரு நோய் என்பதால் நமக்காக இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காகவாவது நமது உணவு முறைகளில் முறைமையாக இருந்து உங்க வயிற்றில் இருக்கும் வாயு கோளாறை வந்த வழி தெரியாமல் விரட்டி விடுங்கள்.இது பற்றிய மேலதிக தகவல்கள் இருப்பின் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.